00:00
04:08
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடிவந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
மலரே
♪
வாசனைப் பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
நான் ஒரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க
மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண்கிளியே
மடிமேல் கொடி போல் விழுந்தேனே
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடிவந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
மலரே
♪
ஏந்திய வீணை நான் இருக்க
ஏழிசை மீட்ட நீ இருக்க
ராத்திரி நேர ராகம் இது
பூவொடு காற்று பாடுவது
இதழால் இனிமேல் நீ எழுதும்
கதை தான் படிப்பேன் நாள் முழுதும்
படித்தால் எனக்கும் இனிக்காதோ
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடிவந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
மலரே